இந்தியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவை சந்தித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜீ.எல்.பீரிஸ் இந்தியா சென்றுள்ளார்.
நேற்று அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்திருந்தார்.
அதேநேரம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியையும் அவர் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.