செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை அணி தெரிவானது!!

Srilanka team

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், Pathum Nissanka, Kusal Mendis, Dinesh Chandimal, Chamika Karunaratne, Dilshan Madushanka, Lasith Embuldeniya மற்றும் Jeffrey Vandersay உள்ளிட்ட 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், Dunith Wellalage மற்றும் Lakshitha Rasanjana ஆகிய இருவரும் மேலதிக வீரர்களாக அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button