இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடி – இந்தியாவுடன் கொண்டிருக்கிறது இலங்கை!!

Srilanka - India

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு  உதவும் விதமாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் தொடர்பில் விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவினால் வழங்கப்பட்ட மருந்துகள், உணவுகள் மற்றும் எரிபொருள் கொள்வனவுகளுக்கான கடன் வரிகள், திருகோணமலை எண்ணெய் குதங்களில் ஆரம்பகால நவீனமயமாக்கல் திட்டம் ,இலங்கையின் கொடுப்பனவுச் சமநிலைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான நாணய மாற்று ஒப்பந்தம், ஆகியவை இந்த நான்கு அம்ச அணுகுமுறைக்குள் உள்ளடங்குகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button