புத்தாண்டு வாழ்த்துப் பதாதையில் தமிழ் மொழியைப் புறக்கணித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமது முடிவை மாற்றிய குறித்த நிறுவனம் தமிழிலும் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்று, சிங்கள் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தமிழர் தரப்பினால் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழியும் இணைந்த வாழ்த்தினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து நோக்குமிடத்து, அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளங்களையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல் பல இடங்களில் தமிழ் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தமிழ் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
அரச நிறுவனம் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் தமிழ் இருக்க வேண்டும் என்பது அரசியல் யாப்பாகும். எனினும் திட்டமிட்ட வகையில் தமிழ்மொழி நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அணிக்கு பல இலட்சம் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பிரதேச செய்தியாளர் போஸ்கோ