இந்தியாசெய்திகள்முக்கிய செய்திகள்
எரிபொருள் மற்றும் மின்சாரம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!!
Srilanka
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளர்களின் வரவேற்பு, பராமரிப்பு ,உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது போன்றவையும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.