மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தான் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி பெர்ணினண்டோ தெரிவித்துள்ளார்.
பதற்றத்தில் தான் அவ்வாறு கூறியதாகவு அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் அதிகார பலம் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.