இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் இவ்விடயம் சாத்தியமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இவ்வாறு புதிய நீதி அமைச்சர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார்.
இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.