கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் ஆகிய அரச சொத்துக்கள் உள்ளடங்கலாக சில அரச சொத்துக்கள் நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் டொலர்களுக்கும் குத்தகைக்கு விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர கொழும்பு துறைமுகத்தின் தெற்கு பகுதியை 600 மில்லியன் டொலர்களுக்கு முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் வழங்கவும் கொழும்பு துறைமுக நகரில் அரசுக்கு சொந்தமான பகுதிகளை 4 பில்லியன் டொலர்களுக்கு குத்தகைக்கு விடவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதனை தவிர இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை 500 மில்லியன் டொலர்களுக்கும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் இருக்கும் அரசுக்குரிய பங்குகளை 300 மில்லியன் டொலர்களுக்கும் விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.