இன்று திங்கட்கிழமை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்நம்பகத் தன்மையுள்ள நிதி நிலையை இலங்கை உறுதிப்படுத்தும் என நம்பப்படுகிறது.