இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வர்த்தமானி!!

srilanka

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பான புதிய வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்கீகரிக்கப்பட்ட 14 வழிகாட்டுதல்கள் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதில் குறித்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் தொடர்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதனூடாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய வழிகாட்டுதல்களின் பிரகாரம் நியமிக்கப்படும் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button