‘இயலாதவர்கள் ஆட்சியைக் கைவிடுங்கள்’ என பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் அறிவிப்பினை விடுத்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சி செய்யும் திறமையுடையவர்களிடம் அந்தப் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமெனவும் .
தற்போதைய பொருளாதார, நிதி, மின்சார, எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாவிட்டால் தீர்வு வழங்கக் கூடிய ஆட்சியாளர்களிடம் அரசாங்கம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்தி ஆட்சி செய்ய முடியாது எனவும் கூட்டாக இணைந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் ,அமைச்சரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எவர் மீதும் நம்பிக்கையில்லை,
இதனால் நாடு வரையறைகளின்றிச் செல்ல அனுமதி முடியாது எனவும் கொதித்தெழுந்த மக்கள் போராட்டங்களினால் நாடு மேலும் அராஜக நிலைக்கு தள்ளப்படும் எனவும் நாட்டு மக்களின் பட்டினியுடன் அரசாங்கத்தினால் விளையாட முடியாது, இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.