பண்டிகை காலத்தில் தற்போது நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் மூலம் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.