மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரம் வழங்கல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்கள், நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும்.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.