கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
முதலில் , புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு செக்-இன் கவுண்டர்கள் நிறுவவும், 8 மாதங்களின் பின்னர் வருகை முனையத்திலும் இரண்டு கவுண்டர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியினை, குடிவரவுத் துறையும், விமான நிலைய மற்றும் ஏவியேஷன் செர்வீசஸ் நிறுவனமும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் பல விமான நிலையங்களில், சிங்கப்பூர் நிறுவனமான தேல்ஸ் டிஸ் தயாரித்த உபகரணங்களோடு இந்த வகையான தானியங்கி குடியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.