இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்படவுள்ள அபாயம் – டொலர்கள் இன்றி கப்பல்களில் எரிபொருள் நிறுத்தி வைப்பு – 12 மணி நேர மின் வெட்டு – ரயில் பயணங்களும் ஸ்தம்பிப்பு!!

srilanka

இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருளினை கப்பல்களில் இருந்து இறக்குவதற்கு டொலர்கள் வழங்கப்படாவிட்டால் கடுமையான மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமாகும் பட்சத்தில் ரயில்கள் ஸ்தம்பிக்க நேரிடலாம் என்றார்.

மேலும் பல நாட்களாக நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கான நிதியை வழங்குமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எரிபொருளை இறக்குவதற்கு தேவையான டொலர்கள் வழங்கப்படாவிடின் அடுத்த வாரத்திற்குள் நாட்டில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் இல்லாமல் அல்ல அரை நாள் மின் துண்டிப்பு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

சுமார் 50% தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button