இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள்!!

srilanka

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இத்திட்டத்தின் தலைவராக செயற்படும் ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாஅரு இனம்காணப்பட்ட குறைந்த நிறையுடைய குழந்தைகள் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் கலாநிதி சுரேன் பட்டகொட கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button