இலங்கைசெய்திகள்

சர்வதேச நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துமாறு கோரிக்கை!!

srilanka

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இன்று , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்  இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற ஊடாடல் பொது நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

தன்னார்வ நிறுவன உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இலங்கையில் போருக்கு பின்னர் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும், அவை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை.

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலும் இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை. தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

எனவே, காணாமல் போதல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் எனவும் 

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button