இலங்கைசெய்திகள்

வரி ஏய்ப்பு காரணமாகவே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது- மத்திய வங்கி ஆளுநர்!!

Srilanka

இலங்கையின் தொழில் வல்லுநர்கள் முறையான வகையில் வரி செலுத்தியிருந்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் 135 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு மருத்துவரை உருவாக்க மக்களின் வரிப்பணம் அதிகளவில் செலவாகிறது. இருப்பினும் அதன்பிறகு தொழில் வல்லுநர்கள் வருமான வரியை சீராகச் செலுத்துவதில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் வரி அறவிடப்படுகிறது.

இலங்கையின் வரி ஏய்ப்பு காரணமாகவே இவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button