PNS தைமூர் ஆகஸ்ட் 12 அன்று ஒரு உறவு முறையான பயணமாக கொழும்பு வந்தடைந்தது.
இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.
மேலும், பிஎன்எஸ் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் ‘போர் விளையாட்டு பற்றி பரப்பப்படும் சில ஊடகச் செய்திகள் தவறானவை” என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு கடற்படைகளுடன் செயல்படும் திறன், கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதாகும்.
இந்தக் கடற்படைப்பயிற்சியின் ஒரு பகுதியாக, PNS தைமூர் மற்றும் SLNS சிந்தூரலா ஆகியவை சூழ்ச்சிப் பயிற்சிகள் மற்றும் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சிகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.