இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் வீதம் அதிகரிப்பு!!
Srilanka
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் வீதம் அதிகரித்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதிலும் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைமை மிக அதிகமாகியுள்ளதாகவும் கடந்த சில மாதங்களில் 30 வீதம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது எனவும் பாலின உரிமைகளுக்காக பாடுபடும் ஸ்டன்ட் அப் மூவ்மென்ட் லங்கா ( SUML) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஷிலா டான்டெனியா கருத்து தெரிவிக்கையில், குடும்ப சுமையைத் தாக்குவதற்காக பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் ஆடைத்தொழிற்சாலைப் பணி நின்றதால் வருமான வழி தேடி இந்நிலையை நாடியுள்ளனர் எனவும் மாதாந்தம் 30 000 தொடக்கம் 50 000 வரை சம்பாதித்த பெண்கள் பாலியல் தொழில் மூலம் அன்றாடம் 15 000 – 20 000 வரை சம்பாதிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணின் நேரடி வாக்குமூலம் மூலம் தகவல்களை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.