கர்ப்பிணிப் பெண்கள் , கைக்குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!!
Srilanka
தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் இலங்கை சிறப்பு நிவாரணப் பொதிகளை அறிமுகப்படுத்தியது.
கொழும்பு மாநகர சபை மற்றும் பொது சுகாதார மருத்துவமாதுகளினால் இணைந்து நடாத்தப்பட்ட இந்த முயற்சியானதுஇ கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் மற்றும் தமது உணவை மேசையில் வைக்க முடியாமல் தவிக்கும் நகர்ப்புற ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்கும்.
´உணவுப் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் மேலும் பல குடும்பங்கள் சிரமப்பட்டு வருகின்றனர்´ என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் இலங்கை பிரதிநிதி எம்மா பிரிகாம் தெரிவித்தார்.
குறைந்த விலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாத குழந்தைகளுக்கு, குறிப்பாக வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் எடுத்துக்கொள்ள முடியாதமையால் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்று தொடங்கப்பட்ட இத் திட்டமானது உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு சில நிவாரணங்களை கொண்டுசெல்வதற்கான ஒரு முக்கியமான படியாகும், ஆனால் இன்னும் பல அவசரமானத் தேவைகள் காணப்படுகின்றன.
ஜீன் மாதத்தின் போது உணவுப் பணவீக்கமானது 80 சதவீததிற்கும் மேலாக அதிகரித்து காணப்பட்டது. அத்தோடு இது தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக கொழும்பு மாநகரப் பகுதியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொண்ட சுமார் 3000 தாய்மார்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாய் தொடர்ந்து வழங்குவதன் மூலம் பாதுகாப்பற்ற உணவுப் பெறுபவர்களுக்கு முக்கிய ஆறுதலாக காணப்படுகின்றது. அத்தோடு அடுத்த மூன்று மாதங்களுக்கும் இவ்வுதவி வழங்கப்படும்.
குழந்தைகளுக்கான தாய்ப்பால் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான முக்கியமான தகவல்களையும் இவர்களிடமிருந்து தாய்மார்கள் பெற்றுக்கொள்வார்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆனது 40 க்கும் அதிகமான முன்பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குறைந்த வருமானம் உடையோருக்கும் சிறப்பு தேவையுடையோருக்கும் சத்தான உணவுகளை ஆறு மாத காலத்திற்கு வழங்கி வருகின்றது.
இந்த ஊக்குவிப்பு தொகையானது தெற்காசியப் பிராந்தியத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீண்விரயம் செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாட்டில், கடுமையான ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைத் தடுப்பதிலும், ஆரம்ப கல்வியை குழந்தையின் வளர்ச்சியில் முக்கியமான முதல் படியாக அமைய ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகின்றது.
தற்போது காணப்படும் இக்கட்டான சூழ்நிலையில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு நம்பிக்கையற்ற ஒரு நிலையில், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆனது சமீபத்தில் இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்கான ஆதரவைக் கோரும் அவசர உலகளாவிய வேண்டுகோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக நிதியுதவி கிடைக்குமிடத்து, வறுமை மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாவட்டங்களில் 200,000க்கும் மேற்பட்ட முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் , குழந்தைகளை அடையும் வகையிலும் நிவாரண உதவிகள் விஸ்தரிக்கப்படும்.