இலங்கைசெய்திகள்

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகிறது!!

Srilanka

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி, 2288/30ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

சட்ட விதிகளுக்கு அமைய, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால், அவசரகால நிலைமைப் பிரகடனம் இரத்தாகிவிடும்.

இந்நிலையில், அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போதே குறித்த சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button