இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குரங்கு காய்ச்சல் தொடர்பில் இலங்கை எச்சரிக்கையுடனேயே உள்ளது!!
Srilanka

இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோய்ப்பாதுகாப்பு முறைகள் தொடர்பான வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அவசர நிலையாக குரங்கு காய்ச்சல் நோய் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபன கூட்டத்தில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
75 நாடுகளில் 16 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 31 வயது நபரொருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.