யுக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம் என வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.