இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை உயர் இராணுவ அதிகாரிகளுக்கு பிடிவிராந்தா!!

Sri Lanka

இலங்கையின் முக்கிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போர்க்குற்றச் செயல் சுமத்தப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணமொன்றை சர்வதேச மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட், சர்வதேச நீதிமன்றின் வழக்கு பணிப்பாளர் கரீம் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் சர்வதேச சட்டங்களுக்கு அமைய சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் இலங்கைக்கு எதிராக இவ்வாறான சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button