அண்மையில் வெளியான 2021 தரம் 5 புலமை பரீட்சை பெறுபேறுகளின் வரிசையில் திருகோணமலை தேசிய பாடசாலையான தி / இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மாணவர்கள் மாவட்ட ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செல்வன் ஜெ.பிரதீஷ் 189புள்ளிகளைப் பெற்று முதல் நிலையையும், செல்வன் து.யுவின் 186 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையையும் செல்வன் க.அஸ்வின் 185 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றியிருந்த 155 மாணவர்களில் 49 மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததுடன் மேலும் 147 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்..
இம் மாணவர்களின் வெற்றிக்கு அர்பணிப்புடன் பணியாற்றிய வகுப்பாசிரியர்களான திருமதி அனித்தா ஜெயநேசன், மா.இந்துஜா, ச. தழிழ்வேந்தன், சி.கிருஷ்ணகாந் ஆகியோருடன் இவர்களுக்கு உரிய ஆலோசனகளை வழங்கி வழிகாட்டிகளாக இருந்த அதிபர்.திரு.செ.பத்மசீலன்,பிரதி அதிபர் , திருமதி.க.தங்கமயிலாள் மற்றும் பகுதி தலைவர் திரு.ஆ.ஜெயநேசன் ஆகியோரை பெற்றோர்களும் கல்விச் சமூகமும் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.
இவர்களை ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.
முதலிடம் பெற்ற செல்வன் ஜெ.பிரதீஷ், எமது இணையதளத்தின் ஆசிரிய வளவாளரான திரு.ஆ.ஜெயநேசன் அவர்களின் புதல்வன் என்பதும் இவர் தொடர்ச்சியாக எமது கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.