இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என காவல்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சட்டவிரோதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பெற்று அதனைப் பதுக்கி வைப்பதால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெற்றோல் மற்றும் டீசல் இன்றி வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்படும் எரிபொருள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தச் செயற்பாட்டை தடுக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.