இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மோதவுள்ளது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் உயிர் குமிழி முறையின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகினார். இந்நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது.
எனினும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி நிச்சயமாக பங்கேற்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.