உலகம்செய்திகள்

மக்களால் நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு!!

solomon island

தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு தான் சாலமான் தீவு. இந்ந நாட்டின் பிரதமராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே. எனினும் இந்த நிலையில் அண்மையில் இவர் தைவானுடனான தூதரக உறவைத் துண்டித்துவிட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது என்று தான் கூற வேண்டும்.

அத்தோடு அரசின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்தன. எனினும் இதைத் தொடர்ந்து பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

எனினும் இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று புதன்கிழமை தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பொலிசார் அவ் இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை விரட்டியடிக்க முன்றார்கள்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பெரும் வன்முறை ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் அதன் அருகில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button