ராகு – கேது ஆகிய இருவர் தான் சூரியனை மறைத்தல், விழுங்குவதாக ஐதீகம். ராகு – கேது இருவரும் சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என கூறப்படுகிறது.
இதனால் சுப மற்றும் அசுப பலன்களை பெற போகும் ராசிக்காரர்கள் யாரெல்லாம் எனப்பார்ப்போம்….
இன்று தோன்றவுள்ள சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில், கிருஷ்ண பட்சத்தில் காலை 10:59 மணியிலிருந்து, மதியம் 03.07 மணி வரை நிகழ இருக்கிறது. இதனால் சாதக, பாதக பலன்களை பெற இருக்கும் 12 ராசிக்காரர்களுக்கான துல்லிய கணிப்புகள்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சில அசுபமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி வெளியில் செல்பவர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். உணவு கட்டுபாட்டில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கூடுமானவரை எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. கிரகணத்தின் பொழுது வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். குடும்பத்தில் குழப்பங்கள் இருந்தால் அதனை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சுப பலன்களே ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவதால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். மேலும் எதிர்பாராத திடீர் பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சுப பலன்களைக் கொடுக்க இருக்கிறது. கிரகணம் நிகழும் பொழுது தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குடும்பத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல், வெளி இடங்களிலும் நீங்கள் இன்முகத்துடன் பேசுவது சுப பலன்களை கொடுக்கும். முன்கோபம் இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் மீது அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சுப பலன்கள் ஏற்படும். பெரிதாக அசுப பலன்கள் எதுவும் ஏற்படாது என்பதால் உங்கள் அன்றாட பணிகளை சிறப்பாக செய்யலாம். எனினும் தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.
கன்னி
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மூலம் எந்த விதமான தீங்கும் ஏற்பட போவதில்லை. எனினும் தேவையில்லாமல் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீ பெரிதா? நான் பெரிதா? என்கிற போட்டி, பொறாமைகளை நீக்கி, விட்டுகொடுத்து செல்வது நல்லது. பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாமில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போகிறது. சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நல்லதை செய்ய போனாலும், அது கெட்டதாக முடியும். கிரஹண சமயத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போகிறது. உங்கள் ராசிக்கு சீரற்ற அமைப்பு என்பதால் மனதில் ஒரு விதமான பதற்றம் நிலவும். வெளி இடங்களில் அதிகம் பொறுமையாக இருப்பது நல்லது. குறிப்பாக பணி செய்யும் இடங்களில் நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது உத்தமம். குழப்பத்தில் இருந்து விடுபட தியானம் மேற்கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் தேவையற்ற வீண் விரயங்களை ஏற்படுத்தி விடும் என்பதால் கிடைக்கின்ற பணத்தை சுப விரயம் ஆக்கிக் கொள்வது, சமயோசிதமாக செயல்படுவது உத்தமம். தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கிரஹண நிகழ்வின் பொழுது ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். உங்கள் விடா முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிகம் பொறுமையை கொடுக்கும். உங்கள் ராசிக்கு சுப பலன்களை கொடுப்பதால் குடும்பத்தில் திடீர் வரவு ஒன்று நிகழும். தேவையற்ற அலைச்சல் மற்றும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் பெரிதாக அசுப பலன்களை ஒன்றும் கொடுக்கப் போவது இல்லை. கிரகணத்தின் பொழுது வெளியிட பயணங்களை தவிர்க்கவும். மேலும் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். போஷாக்கு நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போவது இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் கடினமாக உழைத்தால் தான் உங்களுக்கு அதற்குரிய முழுபலனும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. காரண காரியம் இன்றி எதுவும் நடக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சூரியன் கிரகணம் நடக்கும் போது சூரியன் மறைக்கப்பட்டு கருமையாகக் காட்சி தருவார். அப்படி கிரகண காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.
இறை வழிபாடு, இறைவனை நினைத்து ஜெபம் செய்வதால் பலன்கள் பல மடங்காக கிடைக்கும். இறைவனை நோக்கி ஒரு மந்திரம் சொன்னால், ஆயிரம் மடங்கு பலன் அதிகரிக்கும்.
கிரகண நேரத்தில் தீட்சை வாங்குவது, உபதேசம் வாங்குவது நல்லது. சிலர் சொன்னால் நடக்கும் என கூறுவார்கள் அல்லவா. அவர்கள் கிரகண காலத்தில் ஜெபம் செய்து தன் சக்தியை அதிகரித்து வைத்திருப்பார்கள். குருமார்களிடன் உபதேசம் வாங்குவது, வாக்கு வாங்குவது மிக நல்லது.
பலன் கோடி மடங்கு உயரும்
நீர் நிலைகளுக்கு சென்று அது குளம், ஆறு என எதுவாக இருக்கலாம், அதில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு நமக்கு என்ன மந்திரம் தெரியுமோ, அதை முடிந்த அளவு பல முறை சொல்லுங்கள். அதனால் கிடைக்கக் கூடிய பலன் பல கோடி மடங்கு உயரும். இரவு நேரங்களில் கிரகணமோ அல்லது நீர் நிலை அருகில் இல்லாதவர்கள் உங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் அமர்ந்து இறைவனை ஜெபித்தல் நல்லது.
மூன்று ஜென்மங்களில் ஆயுள் முழுவதும் செய்தால் கிடைத்த பலன், கிரகண நேரத்தில் செய்வதால் கிடைக்கும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|
ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||
எளிய மந்திரங்கள் :
ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
யோகம், தியானம் செய்தால் நன்மை உண்டாகும்.
செய்யக் கூடாதவை:
கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. நீர், காபி, டீ எடுத்துக் கொள்ளுதல் கூடாது. ஏன் என்றால் சர்ப்ப கிரகங்களான ராகு – கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.
அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்
கிரகணங்கள் மூலமாக சில நட்சத்திரங்களுக்குத் தோஷம் உண்டாகலாம்.
தோஷ நிவர்த்தி பொருள்:
தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.
தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.
கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.
சுவாமி வழிபாடு
கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு கிரகண தோஷம் அதிகம்
கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.
அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
தமிழ்வேங்கை மைந்தன்