உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

மின்சாரம் பெற சூரிய சக்தியைப் பயன்படுத்தும் அமஸான் காட்டின் பழங்குடிச் சமூகம்!!

Solar

 அமஸான் காட்டில் வாழும் பழங்குடிச் சமூகம் ஒன்று, சூரிய சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சுற்றுப்பயண வர்த்தகத்திற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறச் சூரிய சக்தித் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பமான சூரிய சக்தித் தகடுகளை அமஸோனஸ் (Amazonas) மாநிலத் தலைநகர் மனோஸிற்கு (Manaus) அருகில் உள்ள ஒரு பழங்குடிச் சமூகம் பெறும்.விளக்குகள் போன்ற அடிப்படைச் சாதனங்கள் சிலவற்றுக்குத் தேவையான மின்சாரத்தைச் சூரிய சக்தித் தகடுகள் உற்பத்திசெய்யும்.

அமஸான் காட்டை முக்கியமாகக் கருதும் பழங்குடியினர், அதைப் பாதிக்காத விதத்தில் மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.பழங்குடிச் சமூகங்களிடையே நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தச் சூரிய சக்தித் தகடுகள் வழங்கப்படுகின்றன.

ஏறக்குறைய 250 சூரிய சக்திச் சாதனங்களை விநியோகிப்பது திட்டம்.

டட்டுயோ (Tatuyo) பழங்குடி கிராமத்தில் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகள் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம்.

மாறுபட்ட வாழ்க்கைமுறையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியைச் சூரிய சக்தித் தகடுகள் சற்று எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button