புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை, நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என தாம் நம்புவதாக அந்த அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தக நிலையங்களில் சிகரெட் சில்லரை விலைக்கு உள்ளதே அவர்களுக்கு அதிலிருந்து விடுபட தடையாக இருப்பதாகவும் அதற்கு தடை விதிப்பதுடன் சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதற்கு தடை விதிப்பதுடன், சிகரட்டிற்கான விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.