வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் சிமாட் வகுப்பறை இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணிணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் உருவான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தின் கீழ் 7.5 இலட்சம் ரூபா செலவில் குறித்த வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன், புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் உமா சந்திரபிரகாஸ், வன்னி மாவட்ட அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தியாளர் கிஷோரன்