வீதியில் நின்று கொண்டிருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (16) காலை காலி, தடெல்ல – பியதிகம சுதர்சனராம என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் வந்த மூவரில் ஒருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணமான குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உந்துருளியில் வந்தவர்களும் தப்பிச் சென்றுள்ளதாகவும், தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகள் காலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.