டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சுஜித் விஜேசிங்க தெரிவிக்கையில், தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் நீக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதி செலுத்தும் அடிப்படையில், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுஜித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.