சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்.வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதல் பயணத்தை, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்கள் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2,880 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே முதல் கப்பல் சேவையை நாங்கள் தொடங்கியுள்ளதால், அது நாட்டில் கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது, ”என்று சோனோவால் PIB வெளியீட்டில் மேற்கோள் காட்டியுள்ளார்..
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னை – இலங்கை போக்குவரத்து சேவை மேலும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.