பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மொத்தம் உள்ள 342 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது.
இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் பெற்றார்.