ஐவின்ஸ் தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவானது தரம் 5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடாத்திய இலவச கருத்தரங்கானது 24 . 12. 2021 ஆரம்பமாகி 02 . 01 . 2022 வரை நடைபெற்றிருந்தது. இக்கருத்தரங்கின் வளவாளர்களாக இலங்கையின் அதிமூத்த முன்னணி ஆசிரியர் திரு. பொ. அம்பிகைபாகன், திரு து. திலிப்குமார், திரு. ஆ. ஜெயநேசன், திரு . சண். சுதர்சன் ,திரு. என். எஸ். தீபன் ஆகியோர் எந்தவித கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளாது சேவை அடிப்படையில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அவர்களுக்கு எது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவர்களின் நலன் சார்ந்து ஐவின்ஸ் இணையதளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கானது பூரண வெற்றியை அடைந்திருக்கிறது. இப்போது வரை பெற்றோர்களின் மாணவர்களின் நன்றி அறிவிப்பில் திழைத்தபடிதான் இணையதளமும் வளவாளர்களும்…
இந்த கல்வி ஊக்கப்படுத்தல் செயற்பாடானது எமது இணையதளத்தின் மேம்படுத்தலுக்காக அதனை இலங்கை வாழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி வெளிப்பாடுமே ஆகும். சில விசமிகள் திரையில் கிறுக்குதல், தேவையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்தல் என தொந்தரவுகளைத் தந்தபோதும் எமது பயணம் எவ்வித இடைநிறுத்தலும் இன்றி திட்டமிட்டபடியே தொடர்ந்து நடைபெற்றது.
இவ்வேளையில் கருத்தரங்கின் ஆரம்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலன்கருதி சிறப்பும் செம்மையுமான கருத்துகளை வழங்கிய சான்றோர்களான யாழ். இந்துக்கல்லூரி உளவள ஆலோசகர் கு. மகிழ்ச்சிகரன், யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன், ஆசிரிய ஆலோசகர் எஸ். எல் மன்சூர் [அக்கரைப்பற்று கல்வி வலயம்], யாழ்மத்திய கல்லூரி சிரேஷ்ட ஆசிரியர் காரை செ.லோகேஸ்வரன், ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் எம். ஏ. தாகிர், [MA.Thahir. ISA ] தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சி. சிவதாஸ் ஆகியோருக்கு மாணவர்கள் பெற்றோர்கள் சார்பிலும் இணையதளம் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மீண்டும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்து இக்கருத்தரங்கு வெற்றியடையவும் பூரணப்படவும் உதவி நல்கிய அத்தனை பேருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.