கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

புலமைச்சிகரம் வே.  அன்பழகன் ஞாபகார்த்த மாபெரும் இலவச கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!

Seminar

ஐவின்ஸ் தமிழ் இணையத்தளமானது புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடாத்தும் கருத்தரங்கு 12.07.2024 இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.  

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு.  சொல்லருவி லலீசன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

கருத்தரங்கு ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதம விருந்தினர் உரை இடம்பெறும்.  அவ் உரையினைக் கேட்டு,  ஆசிரியர் வே.  அன்பழகன் பற்றியும் அவரது கல்விப் புலமை பற்றியும் பெற்றோர்களும் மாணவர்களும் அறிந்து கொள்வதோடு உங்கள் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிகாட்ட இவ் உரை துணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

முதலாவது கருத்தரங்கு வளவாளராக யாழ். முன்னணி ஆசிரியரும்  சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியரும் யாழ் அறுவடை வெளியீட்டு ஆசிரியருமான திரு. என். சிவ தீபன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டலை வழங்குவார். 

இவரது வினாத்தாள் நேற்று 11.07.2024 – வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எமது வழிகாட்டல் சேவையுடன் இணைந்து பயணிக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம். 

Related Articles

Leave a Reply

Back to top button