கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஏராளமான மாணவர்களுடன் இடம்பெற்ற ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த இரண்டாம் நாள் கருத்தரங்கு!!

Seminar

அமரர். ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்த மாக தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக  ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் இரண்டாம் நாள் வழிகாட்டல் வகுப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. 

குறித்த கருத்தரங்கில் , பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் அளவையூர் திரு. கே. ஜெயரமணன்  அவர்களின் வழிகாட்டல் வகுப்புகள் இடம்பெற்றன. ஐவின்ஸ் தமிழ் இணையதளத்தின் கல்விப் பகுதி பொறுப்பாசிரியர் திரு. இ. ஜனதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் 

ஐவின்ஸ் தமிழ் இணையதள கல்விப் பகுதி பொறுப்பாசிரியர் திரு. இ. ஜனதன் தலைமையில் ஆரம்பமான கருத்தரங்கில், முதல் நிகழ்வாக ஆசிரியர் அன்பழகன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டி மாணவர்கள் தத்தமது இல்லங்களில் நின்றவாறே முன்னெடுத்த  அகவணக்கம் இடம்பெற்றது, பின்னர், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யா/ இந்துக் கல்லூரி உதவி அதிபர் உயர் திரு. என். விமலநாதன் அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து,  கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆரம்ப நிகழ்வில் 550 க்கு மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் சூம் ஊடாக நேரடியாக இணைந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 10 000 இற்கு மேற்பட்ட வினாத்தாள்கள்  பிரதி செய்யப்பட்டு பல்லாயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்  என்பதுடன் இக்கருத்தரங்கினை பாடசாலை ரீதியாக மாணவர்கள் குழுவாக இணைந்திருந்து இணையத்திரையில் கற்றுள்ளதாகவும் எமக்கு அறிய  கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button