புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகாரத்த கருத்தரங்கின் முதலாவது வினாத்தாள் வெளியீடும் கருத்தரங்கு விபரமும்!!
Seminar

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் முதலாவது வினாத்தாள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதலாவதாக யாழ். முன்னணி ஆசிரியரும் யாழ். அறுவடை வெளியீட்டு ஆசிரியருமான பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் திரு. சிவ. தீபன் அவர்களின் வினாத்தாள் பகிரப்படவுள்ளது.
குறித்த வினாத்தாளுக்கான விளக்க வழிகாட்டல் நாளை (06.09.2023) இரவு 8.00 மணி தொடக்கம் 9.30 வரை ஆசிரியர் தீபன் அவர்களால் zoom (சூம் ) ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளைய கருத்தரங்கு நிகழ்வில் எழுத்தாளரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான திரு. செ. மகேஷ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த நேரத்தில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
