கல்விசெய்திகள்

தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. வே.கமலேஸ்வரனின் சைவ சமயபாட வழிகாட்டல்  கருத்தரங்கு இன்று!!

Seminar

 ஐவின்ஸ்  தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும்  சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கில் இன்றைய தினம் ( 12.05.2023 –  வியாழக்கிழமை  ) சைவ சமய பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் , தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. வே.கமலேஸ்வரனின் சைவ சமயபாட வழிகாட்டல்  கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சைவ சமய  எதிர்பார்ப்பு வினாக்கள் குறித்தும் ஏனைய பகுதிகளுக்கான சுருக்கமான விடையளித்தல் முறை பற்றியும் விளக்கவுள்ளார்.

இக் கருத்தரங்கானது ஐவின்ஸ் தமிழ் யூரியூப் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளதால் நாடு பூராகவுமுள்ள மாணவர்கள் இணைந்து பயன்பெறுமாறு மட்டுவில் வளர்மதி கல்விக் கழகத்தினரும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் கல்விப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button