கல்விசெய்திகள்

சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சிப் பிரதேச மாணவர்களுக்கான இலவச நேரடிக் கருத்தரங்கு!!

Seminar

இம்மாதம் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள  தென்மராட்சி மாணவர்களுக்கான இலவச நேரடிக் கருத்தரங்கு மட்டுவில் தெற்கு வளர்மதி கல்வி கழகத்தில்   இடம்பெறவுள்ளது.

 ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து  யாழ் பிரபல ஆசிரியர்களின் வழிகாட்டுதலில்  05.05.2023 தொடக்கம் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக கருத்தரங்கினை நடாத்தவுள்ளது.

ஓய்வு பெற்ற அதிபரும் வளர்மதி கல்விக் கழக பொறுப்பாசிரியருமான திரு. ச. கிருஷ்ணன் அவர்களின் ஒழுங்கமைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இக் கருத்தரங்கில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி எதிரபார்க்கை வினாத்தாள்கள் இந்த கருத்தரங்கில் மீட்டல் செய்யப்படுவதுடன் பரீட்சை வழிகாட்டல் தொடர்பான இலகு வழி நுட்பங்களும் தெளிவுபடுத்தப்படும்.

இக்கருத்தரங்கில் பங்கு பற்ற விரும்புவோர் 077 604 8940  என்ற ஒழுங்கமைப்பாளரின் ஒழுங்தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது   077 60 44 212 என்ற பொறுப்பாசிரியரின் இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு முற்பதிவுகளைச் செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

கனடா வாழ். மட்டுவில் தெற்கு சுந்தரலிங்கம் செந்தூரன் தனது மகனான ஆரவ்  இன் 3 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரணவன் அறக்கட்டளை மூலம் இக் கருத்தரங்கிற்கு அனுசரணை வழங்கியுளளமை குறிப்பிடத்தக்கது.

 மேலதிக தகவல்கள் பதாதையில்  தரப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button