இலங்கைசெய்திகள்

யாழ். கைதடிப் பிரதேச O/L மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!

Seminar

கைதடி பிரதேச  0/L  மாணவர்களுக்கான  முக்கிய 05 பாடங்களிற்கான விசேட  வழி காட்டல் கருத்தரங்கு  கைதடி மேற்கு  சரஸ்வதி சனசமூகநிலையத்தின் ஏற்பாட்டில்  சுவிஸில் வசிக்கும் கல்வி ஆர்வலர் திரு.  பார்த்தீபன்  பகீன் அனுசரணையிலும் ஐவின்ஸ் தமிழ் செய்தி இணைய தளத்தின் ஊடக அனுசரணையிலும் 07 .04.2023 வெள்ளிக் கிழமை நாளை ஆரம்பமாகவுள்ளது.

காலை 8.30 மணிக்கு கணிதபாட கருத்தரங்குடன் ஆரம்பமாகி , தொடர்ந்து எதிரவரும் 15 ஆம் திகதி வரை தமிழ் ,வரலாறு , ஆங்கிலம் , விஞ்ஞானம் என்றவாறு தொடரவுள்ளது.

 யாழ் மாவட்டத்தின் சிறந்த வளவாளர்கள் வழிகாட்டும் இக்கருத்தரங்கில் கைதடி மற்றும் அதன் அயல் பிரதேச  மாணவர்கள் கலந்து கொள்டு பயன் பெறுமாறு கைதடி மேற்கு சனசமூக நிலையமும் கிளை அமைப்பினரும் கேட்டுக்கொள்கிறார்கள்.

 மேலதிக தொடர்புகளுக்கு :+94 77 728 6200 

குறிப்பு : நேரடியாக யாராவது பங்கு பற்ற விரும்பின் மேற்படி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு பங்குபற்ற முடியும்

Related Articles

Leave a Reply

Back to top button