ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்விப்பகுதி சாதாரணதர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் இன்றைய கருத்தரங்கின் விசேட விருந்தினராக முன்னாள் சுடரொளிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சுயாதீன ஊடகவியலாளரும் ஊடகப்பயிற்றுவிப்பாளருமான அருண் ஆரோக்கியநாதன் அவர்கள் பங்கேற்கவுள்ளார்.
கருத்தரங்கு ஆரம்பத்தில் “சமூக வலைத்தங்களை சரியாகப் பயன்படுத்துவது எப்படி ?” என்னும் தலைப்பில் செம்மையும் சிறப்புமான கருத்துகள் அவரால் பகிரப்படவுள்ளது. மாணவர்களும் பெற்றோரும் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.