மண்வாசனைமுக்கிய செய்திகள்

தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது?

Self-confidence

வாழ்வை செதுக்கியதன்னம்பிக்கை மந்திரங்கள்….

Self motivation advices :

1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையை குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பது முதலில் avoid செய்யுங்கள்.

2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking

3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்த கவலை இருந்தாலும்….

4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள்.

5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள்.

6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

நான் தன்னம்பிக்கை மிக்கவன்
நான் சக்தி மிக்கவன்
நான் சாதனையாளன்
நான் அன்பு மிக்கவன்
என்னால் முடியும் முடியும்
முடியும் வெற்றி நிச்சயம்.

அடிக்கடி இதை உங்களுக்குள்
சொல்லி கொள்ளுங்கள்.

7) சின்னஞ் சிறு இலக்குகளை தினமும்நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். eg :சரியான நேரத்திற்கு செல்லுதல்.இனிய சொற்களை பேசுதல்.
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்.மற்றவர்க்கு உதவுவதல் etc etc

8) வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஜெயித்து காட்டுவேன்… என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.

9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

10)Ego, Jealous, Fear, Hesitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி
தூர போடுங்கள்.

ஒரே நாளில் எல்லாம் முடியாது.
சிறுக சிறுக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த 10 Pointsம் தெளிவாக எழுதி வைத்து கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வையுங்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button