இலங்கைசெய்திகள்

பாரிய கடல் கொந்தளிப்பு— மட்டக்களப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்!!

Sea turbulence

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதன்காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிக்கின்றனர்.

களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாதீவு புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூநொச்சிமுனை நாவலடி புன்னக்குடா உட்பட பல கரையோர பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பினால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர். மீன் விற்பனை நிலையங்கள் மீன் வாடிகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.

செய்தியாளர் – சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button