அரச, அரசாங்க அனுமதி பெற்ற சகல பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி , எதிர்வரும் 25 ம் திகதி திங்கட்கிழமை அடுத்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை இவ்வாறு திரும்பத் திரும்ப ஒத்திவைக்கப்படுவது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.