சகல பாடசாலைகளுக்கும் யூலை 4 ம் திகதி முதல் யூலை 8 ம் திகதி வரையான ஒரு வாரம் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை நடத்துவதில் ஏற்படும் சிரமம் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை பிறிதொரு விடுமுறைக் காலத்தில் ஈடு செய்யப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.