இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிபர் இல்லாமல் 323 பாடசாலைகள் – வெளியான பகீர் தகவல்!!

Schools

  தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 323 அதிபர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே தெரிவித்தார்.

அங்கு ஆயிரத்து 523 அதிபர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால், தற்போது 978 அதிபர்கள் இருப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பாடசாலைகளில் அதிபர் பதவிகளுக்கு பதில் கடமையாற்றும் அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறும் தென் மாகாண ஆளுநர், கல்வி உத்தியோகத்தர்களுக்கான 60 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்.

மேலும், 223 கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால், தற்போது 174 பேர் இருப்பதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் , கல்வி அமைச்சு தரப்படுத்தப்பட்ட அதிபர்களை நியமித்து மாகாண சபைக்கு விடுவித்தால் அதிபர் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அந்த அதிபர்களை நியமிக்க முடியும் எனவும் ஆளுநர் கலாநிதி வில்லி கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button